பிளாக்கில் போஸ்டிங் (Posting) இடுவது எப்படி?

நீங்கள் பிளாக் உருவாக்கி விட்டீர்கள். இப்போது இதில் இப்போது போஸ்டிங் (Posting) அதாவது நீங்கள் விரும்பிய செய்தியை உங்கள் பிளாக்கில் எப்படி வெளியிடுவது என்று பார்ப்போம்.

கீழே உள்ள விளக்கப்படத்தை கவனிக்கவும்
அதில் அம்புக்குறியிட்டு உள்ள New Post (1) ஐ செலக்ட் செய்யவும்


2ல் தலைப்பை டைப் செய்யவும். அல்லது வேறு எங்காவது டைப் செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

3ல் பிளாக்கில் நீங்கள் வெளியிட விரும்பும் செய்தியை டைப் செய்யவும். 

தமிழில் டைப் செய்ய விரும்பினால் 11 என்ற எண்ணால் அம்புக்குறியிட்டுள்ள இந்தி எழுத்துக்கு அருகில் உள்ள சிறிய அம்புக்குறி பட்டனை கிளிக் செய்து  தமிழ் என்பதை செலக்ட் செய்து தமிழில் டைப் செய்யலாம்.
அல்லது வேறு எங்காவது டைப் செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
(தமிழில் டைப் செய்ய http://tamileditor.org இந்த தளத்தை பயன்படுத்தலாம்)

4ஐ கிளிக் செய்து நீங்கள் விரும்பிய படத்தை இடம் பெற செய்யலாம்.

5ஐ கிளிக் செய்து நீங்கள் விரும்பிய வீடியோவை இடம் பெற செய்யலாம்.

6ஐ கிளிக் செய்து நீங்கள் டைப் செய்துள்ள செய்தியை அல்லது தகவலை அலைன்மெண்ட் (Alignment) செய்து கொள்ளவும்.

7ல் எழுத்தின் கலரை மாற்றிக்கொள்ளலாம்.

8ல் எழுத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

9ல் எழுத்தின் ஸ்டைலை மாற்றிக்கொள்ளலாம் (தமிழில் மாற்றும் வசதியில்லை, ஆங்கில எழுத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்)

2ல் தலைப்பாக என்ன இடம்பெற செய்தீர்களோ அதையே 10ல் காப்பி செய்யது பேஸ் செய்து கொள்ளவும்.

12ல் லிங்க கொடுக்கலாம். உங்களது தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வார்தையை அல்லது வரியை கிளிக் செய்தால் அது வேறு வலைதளத்திற்கு செல்லுமாறு செய்வது. 

எடுத்துக்காட்டுக்கு கீழே உள்ள தொடரை கவனிக்கவும். இதில் உள்ள http://tamilwebblogs.blogspot.com என்பதை கிளிக் செய்தால் அந்த வலைதளத்திற்கு சென்றுவிடும்.


பிளாக் சம்மந்தமான தொழில்நுட்ப செய்திகளுக்கு http://tamilwebblogs.blogspot.com/


இன்னும் தொடரும் நீங்கள் அளிக்கும் உற்சாகத்தில்....

5 comments:

  1. மிக அருமையான ப்ளாக். தமிழர்களுக்கு இப்படி ஒரு ப்ளாக் பேசிக்ஸ் கட்டாயம் தேவை

    ReplyDelete
  2. தொடருங்கள்.

    ReplyDelete
  3. போஸடிங் இடும் போது ஏதேனும் சிக்கல் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அதை தெரிவிக்கவும்

    ReplyDelete